இப்ப தேனும் கசக்கிறது முன்னணி இந்திய நிறுவனங்களின் தேனில் சர்க்கரை பாகு கலப்படம், சோதனையில் அம்பலம்... சமீபத்தில் சில பிரபலமான நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவரும் தேன், தூய்மைக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய இந்த சோதனையில், பல நிறுவனங்களின் தேனில் செயற்கை சர்க்கரை பாகை கலப்படம் செய்திருப்பது தெரியவந்தது.* மருத்துவத்தில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. தேன் பொதுவாக உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடிய ஒரு உணவுப்பொருள். தற்போது தொற்றுநோய் பரவி வரும் நிலையில் தொற்றுநோயை எதிர்த்து போராடும் குணம் தேனுக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், அதனுடன் சர்க்கரை சேர்ந்தால் உடலுக்கு ஆரோக்கியம் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். இந்நிலையில், மூலக்கூறு மட்டத்தில் ஒரு பொருளின் கலவையை அறிவதற்கான இந்த சோதனை (என்.எம்.ஆர் சோதனை) ஜெர்மனியில் உள்ள ஒரு ஆய்வகத்தில் செய்யப்பட்டுள்ளது. தேனை ஏற்றுமதி செய்ய விரும்பும் இந்திய நிறுவனங்களுக்கு இந்த சோதனை தேவைப்படுகிறது. அந்த வகையில் டாபர், பதஞ்சலி, பைத்யநாத்...
Popular posts from this blog
கொட்டிக்கிடக்கிறது வெட்டிவேரில் மகிமை
வெட்டிவேரினை எலுமிச்சை வேர் எனவும் கூறுவார்கள். நீர்கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் வெட்டி வேரை சுத்தம் செய்து, உலர்த்தி, பொடி செய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகத்தைப் பொடிசெய்து சம அளவு எடுத்து வெந்நீரில் 200 மி.கி. குடித்து வந்தால் தீர்வு கிடைக்கும். கோடையில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்கும் வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சூடு, நாவறட்சி, தாகம், காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். மேலும் சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும். வெட்டிவேர் எண்ணையை கொண்டு நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் வடுக்கள் மீது தடவி வந்தால் அவை மறைந்துவிடும். இந்த எண்ணையை தேய்த்துக் குளிக்கலாம் சீயக்காய்க்கு பதில் வெட்டிவேரின் பவுடரை பயன்படுத்துங்கள். இதை தொடர்ந்து செய்தால் முகத்தில் எண்ணெய் வழியாது, முகம் கூடுதல் அழகுடன் காணப்படும். வெயில் காலத்தில் உண்டாகும் அதிக வியர்வை மற்றும் அரிப்பிற்கு வெட்டி வேரை நீரில் ஊறவைத்து, அரைத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம...
உமிழ் நீர் உயிர் நீர்
சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்? உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து! உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக் கொண்டனர். வாழ்வதற்காக உண்டனர். உண்பதற்காக வாழ்ந்தனர். அதனால் தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவை பற்களால் நன்றாக மென்று சாப்பிட்டனர். குழந்தைகளுக்கும் பழக்கப் படுத்தினார்கள். அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்திருந்தது. வயிற்றுக்குள் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர். உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை. தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது. நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கண...