கால்களில் ஏற்படும் சியாட்டிக்கா பிரச்சனை மற்றும் அதற்கானத் தீர்வுகள்

இன்றைய சூழலில் பலருக்கும் கால்களில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த சியாட்டிக்கா (SCIATICA).  சிறிது தூரம் நடந்தாலே கால்களில் ஏற்படும் அதிக வலி, பின்னங்காலில் நரம்புகள் சுண்டி இழுக்கும் வலி, கால்கள் மரத்து போவது போன்ற பிரச்சனைகளை மருத்துவர்கள் சியாட்டிக்கா என்று அழைக்கின்றனர்.


இத்தகைய வலியால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. இதுபோன்ற வலிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் ஏற்படும். தூங்கிய பிறகு கால்களின் நரம்பு சுண்டி இழுத்து கால்களை அசைக்க முடியாத அளவிற்கு கடுமையான வலியை ஏற்படுத்தும்.


 


சியாட்டிக்கா (SCIATICA) என்றால் என்ன


உடலின் பின் பகுதியில் இருந்து கணுக்கால் வரைக்கும் தொடை, கால் நடுப்பகுதியில் அமைந்திருக்கக் கூடிய ஒரு முக்கியமான நரம்புதான் இந்த சியாட்டிக்கா நரம்பு. நம் உடலில் இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய நரம்பும் இதுதான். மூளையில்  இருந்து கால்களுக்கு செல்லக்கூடிய தகவல்களை கொண்டு செல்லும் ஒரு முக்கிய பணியை இந்த சியாட்டிக்கா நரம்பு செய்கிறது. இந்த நரம்புதான் நம் கால்களை பயன்படுத்தி செய்யக்கூடிய அணைத்து வேலைகளுக்கும் காரணமாக அமைகிறது.      இத்தகைய முக்கிய நரம்பில் பிரச்சனை ஏற்படும் போதோ அல்லது இந்த நரம்பு பலவீனம் அடையும் போதோ தான் இந்த சியாட்டிக்கா பிரச்சனை ஏற்படுகிறது.


தீர்வு


இத்தகைய  பிரச்சனையை நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை கொண்டு எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம். 


இஞ்சி எண்ணெய்


இது ஒரு Anti-inflammatory Oil. கடுமையான வலியை கூட விரைவில் சரி செய்யக் கூடியது இந்த இஞ்சி எண்ணெய். இந்த எண்ணெய்யை 4-5 சொட்டுக்கள் வலி ஏற்படும் இடத்தில் விட்டு மசாஜ் செய்தால் போதும், வலியில் இருந்து விடுபடுவதை நாம் உணரலாம். கால் நரம்புகளில் ஏற்படும் Inflammation குறைத்து வலிகளில் இருந்து நிவாரணம் தரும். இந்த எண்ணெய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.


ஒத்தடம் கொடுப்பது



சூடு நீர் அல்லது ஐஸ் கட்டிகளை கொண்டு கால்கள் முழுவதும் ஒத்தடம் கொடுக்கலாம். இப்படி செய்வதன்  மூலம் கால் நரம்புகளில் உள்ள இரத்த ஓட்டம் அதிகரிக்கும். நரம்புகளில் ஏற்படும் Inflammation விரைவில் சரி ஆகும். இப்படி தினமும் 1-2 முறை ஒத்தடம் கொடுத்து வர, சியாட்டிக்கா பிரச்னையால் ஏற்படும் வலியில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.


Magnesium Sulphate - Epsom Salt



இது நாட்டு மருந்து கடை மற்றும் பொது மருந்து கடைகளில் கிடைக்கும். இதில் அதிகப்படியான Magnesium இருப்பதால், இயற்கையாகவே இது ஒரு வலி நிவாரணி. இந்த Epsum சால்ட்டை 2 ஸ்பூன் எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு, அந்நீரை சூடு தாங்கும் அளவிற்கு காலின் தொடையில் இருந்து ஊற்ற வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் சியாட்டிக்கா பிரச்னையால் ஏற்படும் வலியில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.


இதுவரை உடம்புக்கு வெளியே செய்யக்கூடிய மருத்துவ குறிப்புகளை பார்த்தோம். இப்பொது உடம்புக்குள் உட்கொள்ளும் மருத்துவ முறைகளை பற்றி பார்ப்போம்.


பூண்டு பால்



பூண்டு இயற்கையாகவே ஒரு Anti-Inflammatory Product. பூண்டு நரம்புகளுக்கு தேவையான சத்தை கொடுக்கக்கூடியது. மேலும் நரம்புகளின் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தக்கூடியது.


செய்முறை


8-10 பூண்டு பற்களை எடுத்து நசுக்கி கொள்ளுங்கள் ஒரு கிளாஸ் பாலை ஊற்றி நசுக்கிய பூண்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நல்ல கொதிக்க விடுங்கள். இவ்வாறு செய்து ஒரு வாரத்திற்கு தினமும் பருகி வந்தால் சியாட்டிக்கா பிரச்னையால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.


இந்த சியாட்டிக்கா நரம்பை வலுப்பெற செய்ய வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள்.


வைட்டமின் பி12 அதிகம் உள்ள உணவு வகைகள்


அனைத்து வகையான இறைச்சி பொருட்கள், பால், தயிர், முட்டை, சீஸ், சோயா பால்.


வைட்டமின் டி:


இது நமக்கு இயற்கையாகவே சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய சத்து. தினமும் 1/2 மணி நேரமாவது சூரிய ஒளி உடம்பில் படும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அல்லது வைட்டமின் டி3 மாத்திரைகளை உட்கொள்ளலாம்


மேற்சொன்ன முறைகளை பயன்படுத்தி சியாட்டிக்கா பிரச்னையால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் பெறுங்கள்.


Popular posts from this blog

கொட்டிக்கிடக்கிறது வெட்டிவேரில் மகிமை

உமிழ் நீர் உயிர் நீர்