Posts

Showing posts from September, 2020

மறந்த நோய் தடுப்பு மரபுகள்

Image

மன அழுத்தத்தை போக்கும் பாலாசனம்

Image
நம் உடலில் சேரும் கழிவுப் பொருட்கள் மற்றும் ரத்தத்தில் தேக்கமடையும் கழிவு பொருட்களை அவ்வப்போது நீக்கப்பட வேண்டும் எனில் எளிமையான உடற்பயிற்சிகள் உடலுக்கு அவசியம். அப்படியான பயிற்சிகளில் யோகாசனப் பயிற்சியை சிறந்தது எனலாம். இது உடலை பிற பயிற்சிகளை போல் இருக்க செய்வதில்லை. எனவே அனைத்து உறுப்புகளுக்கும் தடையில்லாமல் ரத்தம் பாய்ந்து ஆரோக்கியத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நாம் இங்கு பார்க்கப்போவது மன அழுத்தத்தை போக்கும் பாலாசனம் என்னும் பயிற்சியை. பாலப் பருவம் என்றால் குழந்தைப் பருவத்தை குறிக்கும். குழந்தை முதலில் அமர்வதற்கு தேர்ந்தெடுக்கும் ஒரு ஆரோக்கியமான இருக்கை முறையை நம்முடைய ஆரோக்கியத்திற்கும் பயின்று கொள்ள வலியுறுத்துவதால் இதற்கு “பாலாசனம்” என்று பெயர். இந்த ஆசனத்தை செய்வது மிக எளிது. இது மன அழுத்தத்தை நீக்கும் அற்புத ஆசனம் எனலாம். செய்முறை இரண்டு கால்களையும் மடக்கி வஜ்ராசனத்தில் அமர்வது போல் முழங்கால்கள் மீது அமரவும். அதன் பின் இரண்டு கைகளையும் முன்னோக்கி நீட்டி குழந்தைகள் படுப்பது போல் நெற்றி தரையில் படும்படி குனியவும். மூச்சை சீராக விடவும். இதே நிலையில் 15 முதல் 20 வினாடிகள் அ...

கொட்டிக்கிடக்கிறது வெட்டிவேரில் மகிமை

Image
வெட்டிவேரினை எலுமிச்சை வேர் எனவும் கூறுவார்கள். நீர்கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் வெட்டி வேரை சுத்தம் செய்து, உலர்த்தி, பொடி செய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகத்தைப் பொடிசெய்து சம அளவு எடுத்து வெந்நீரில் 200 மி.கி. குடித்து வந்தால் தீர்வு கிடைக்கும். கோடையில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்கும் வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சூடு, நாவறட்சி, தாகம், காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். மேலும் சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும். வெட்டிவேர் எண்ணையை கொண்டு நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் வடுக்கள் மீது தடவி வந்தால் அவை மறைந்துவிடும். இந்த எண்ணையை தேய்த்துக் குளிக்கலாம் சீயக்காய்க்கு பதில் வெட்டிவேரின் பவுடரை பயன்படுத்துங்கள். இதை தொடர்ந்து செய்தால் முகத்தில் எண்ணெய் வழியாது, முகம் கூடுதல் அழகுடன் காணப்படும். வெயில் காலத்தில் உண்டாகும் அதிக வியர்வை மற்றும் அரிப்பிற்கு வெட்டி வேரை நீரில் ஊறவைத்து, அரைத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம...

வைரஸை சமாளிக்கும் முருங்கை

Image
எந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும்  எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கைக்குதான். நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் எந்த வைரஸும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது. நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள என்னவெல்லாம் சாப்பிடலாம் என பெரிய லிஸ்ட் போட்டு யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. பத்து ரூபாய்க்கு கிடைக்கும் முருங்கைகீரை அல்லது இரண்டு முருங்கைக்காய் போதும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உபயோகித்தால், நமது நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு உயர்த்திக் கொள்ளலாம். முருங்கையில் வைட்டமின் C ஆனது ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதை விட 7 மடங்கு அதிகமாக உள்ளது. முருங்கையில் வைட்டமின் A ஆனது கேரட்ல் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது. முருங்கையில் வைட்டமின் B2 ஆனது வாழைப்பழத்தில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது. வைட்டமின் B3 ஆனது வேர்க்கடலையில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது. முருங்கையில் கால்சியம் சத்து பாலில் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது. முருங்கையில் புரோடீன்(புரத) சத்து பாலில் உள்ளதை விட 2 மடங்கு அதிகமாக உள்ளது. முருங்கையில் மெக்னேஷியம் சத்து முட்டையில் உள்ளதை விட 36 மடங்கு அதிக...

நரைமுடியை கருமையாக மாற்றும் ஹேர் ஆயில்

Image
நமது அழகில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல் அழகு தான். அதிலும் கருகருவென அலைபாயும் கூந்தல் என்றால் உங்கள் அழகை பலமடங்கு கூட்டியே காட்டும். அழகை மட்டுமா, உங்கள் இளமையையும் சேர்த்து தான். ஆனால் இளம் வயதிலேயே உங்கள் கூந்தல் நரைத்து விட்டால் என்ன நடக்கும். உங்கள் இளமையும் வயதான தோற்றம் பெற்று விடும். இந்த இளநரையை நீங்கள் என்ன தான் மறைக்க முயன்றாலும் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காமல் நேரம் வீணானது தான் மிச்சமாக இருக்கும். செயற்கை கலரிங் போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்த கூட வாய்ப்புள்ளது. ஆனால் இயற்கை முறைகள் அப்படி இல்லை சற்று தாமதமானாலும் நிரந்தர பலனுடன் பக்கவிளைவுகள் இல்லாத பரிசை கொடுக்கும். பீர்க்கங்காய் எண்ணெய் இது இளநரைகளின் வேர்ப் பகுதியின் நிறத்தை மாற்றி இளநரையை போக்குகிறது. தேவையான பொருட்கள் உலர்ந்த பீர்க்கங்காய் - 1/2 கப் தேங்காய் எண்ணெய் - 1 கப் செய்முறை பீர்க்கங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி 4-5 நாட்கள்  நிழலிலே காய வைக்க வேண்டும். இந்த உலர்த்த பீர்க்கங்காயை 3-4 நாட்கள் தேங்காய் எண்ணெய்யில் ஊற வைக்கவும். இப்பொழுது தேங்காய் எண்ணெய்யை பீர்க்கங்காயுடன் கொதிக்க விடவும். எ...

நீண்ட நேரம் மாஸ்க் அணிபவரா கவனம் செலுத்துங்கள்

Image
மாஸ்க் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். நீண்ட நேரம் தொடர்ந்து மாஸ்க் அணிவதால், இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவும் , மூளைக்குச் செல்லும் அளவும் ஆக்ஸிஜன் குறைகிறது நீங்கள் பலவீனமாக உணர ஆரம்பிப்பீர்கள். மரணத்திற்கும் வழிவகுக்கக் கூடும். நீங்கள் தனியாக இருக்கும் போது மாஸ்க் அணிய வேண்டாம். வீட்டில் பயன்படுத்த வேண்டாம். நெரிசலான இடத்தில் அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது மட்டுமே மாஸ்க்கைப் பயன்படுத்தவும் பெரும்பாலும் உங்களை கூட்டத்திலிருந்து பிரிப்பதன் மூலம், மாஸ்க் பயன்பாட்டைக் குறைக்கவும் எப்போதும் இரண்டு மாஸ்க் வைத்திருங்கள். 4-5 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள். தனித்திருப்போம் பாதுகாப்பாய் இருப்போம்

கால்களில் ஏற்படும் சியாட்டிக்கா பிரச்சனை மற்றும் அதற்கானத் தீர்வுகள்

Image
இன்றைய சூழலில் பலருக்கும் கால்களில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த சியாட்டிக்கா (SCIATICA).  சிறிது தூரம் நடந்தாலே கால்களில் ஏற்படும் அதிக வலி, பின்னங்காலில் நரம்புகள் சுண்டி இழுக்கும் வலி, கால்கள் மரத்து போவது போன்ற பிரச்சனைகளை மருத்துவர்கள் சியாட்டிக்கா என்று அழைக்கின்றனர். இத்தகைய வலியால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. இதுபோன்ற வலிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் ஏற்படும். தூங்கிய பிறகு கால்களின் நரம்பு சுண்டி இழுத்து கால்களை அசைக்க முடியாத அளவிற்கு கடுமையான வலியை ஏற்படுத்தும்.   சியாட்டிக்கா (SCIATICA) என்றால் என்ன உடலின் பின் பகுதியில் இருந்து கணுக்கால் வரைக்கும் தொடை, கால் நடுப்பகுதியில் அமைந்திருக்கக் கூடிய ஒரு முக்கியமான நரம்புதான் இந்த சியாட்டிக்கா நரம்பு. நம் உடலில் இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய நரம்பும் இதுதான். மூளையில்  இருந்து கால்களுக்கு செல்லக்கூடிய தகவல்களை கொண்டு செல்லும் ஒரு முக்கிய பணியை இந்த சியாட்டிக்கா நரம்பு செய்கிறது. இந்த நரம்புதான் நம் கால்களை பயன்படுத்தி செய்யக்கூடிய அணைத்து வேலைகளுக்கும் காரணமாக அமைகிறது.     ...