கடல் நீர்

இயற்கை தந்த அற்புத மருந்து
- மல்லிகா செந்தில்



இயற்கை தந்த அற்புதங்களில் ஒன்றான கடல் பற்றிய அரிய செய்திகள் ஆச்சரியத்தை தருகிறது. கடற்கரை (பீச்) என்றால் மகிழ்ச்சி, அமைதி, அலையோசை, உப்புக் காற்று  என நிறைய பேருக்கு மனதுக்குப் பிடித்த இடமாக இருக்கும்.


கோயிலை ஒட்டிய கடலில் நீராடி விட்டு, ஈர உடுப்புகளுடன் சுவாமி தரிசனம் செல்வது காலம் தொட்டு இருந்து வரும் பழக்கம். கடல் நீர் என்றால் உப்பானது என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், உப்புத் தண்ணீரில் குளித்துவிட்டு ஈர உடையுடன் தரிசனத்துக்கு செல்வது ஏன் என்று கேள்விகள் வரும்…?  


அதிலும் நம் முன்னோர்கள் அறிவியல்பூர்வமாக யோசிக்கும் விஞ்ஞானிகள் என்று கூடச் சொல்லலாம்.


  கடல் நீர் நம் உடல் மீது பட்டாலே கொஞ்சம் அரிப்பு, ஒரு விதமான Uneasy -ஆக இருக்கும். அந்த அரிப்பிலும் நுண்ணுயிர்க் கொல்லியாக (antibiotic medicine) ஒரு நோய் எதிர்ப்பு மருந்து உள்ளது. கடலில் குளிக்கும் போது, தலை முதல் கால் வரை கடல் நீர் உடல்முழுவதும் புகுந்து , உடலில் உள்ள அழுக்குகள், நோய்த் தொற்றுகள் குறிப்பாக வைரஸ்களை அறவே நீக்கும் தன்மை கொண்டது.  நம் உடலில் உப்புத் தண்ணீர் பட்டவுடன் எதேச்சையாக உருவாகிய வைரஸ்கள் செயலிழந்து வியர்வை வழியாக வெளியேறும். அதனால்தான் கடலுக்குச் சென்றால் ”காலையாவது  நனைத்து விட்டு வா” என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.  


ஒரு சிலர்  நோய் தாக்கம் அதிகமாகும் போது, “நமக்கு நேரம் சரியில்லையோ  ” என நினைத்து ஜாதகம் பார்க்க  செல்வார்கள். ஜாதகம் பார்ப்பவரோ, “ஒரு முறை திருச்செந்தூர் அல்லது ராமேஸ்வரம் சென்று கடலில் நீராடிவிட்டு தரிசனம் செய்து வாருங்கள் எல்லாம் சரியாகிவிடும்” என்பார்கள். திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடலில் நீராடும் பழக்கத்தை தொடர்ந்து மக்கள் கடைபிடித்து வருகிறார்கள்.


ராமேஸ்வர மும் இதுபோலத்தான். அங்குள்ள 21 தீர்த்தக் கிணறுகளில் உள்ள நீரில் பல்வேறு நோய் எதிர்ப்பு சக்திகள்  உள்ளது . எதையும் அறிவியலோடு சேர்த்து பார்த்தால், பெரியவர்கள் சொன்ன வழிமுறைகள் எல்லாம் நமது நன்மைக்கே என விளங்கும். அதனால் கடலை ஒட்டிய தலங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக கடலில் நீராடி விட்டு வரலாம். எல்லா மருத்துவர்களும் உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்தால் நல்லது என்று சொல்லும் போது, உப்புத் தண்ணீரில் குளித்தால் மிகப்பெரிய நோய்எதிர்ப்பு ஆற்றல் உண்டு என்றே தோ ன்றுகிறது.


நம் வீட்டில், நாம் இருக்கும் இடங்களில் எதுவெல்லாம் இயற்கையாக கிடைக்கிறதோ அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். காசி என்றாலே நோய் நீக்கும் கங்கை நதி நினைவுக்கு வருவதுபோல, குற்றாலம் போன்ற நீர்வீழ்ச்சிகளின் நீர், பல மூலிகைகளை உரசியபடி மருத்துவ  குணங்களோடு வருவதால் அதுவும் நமது உடலுக்கு இயற்கை தந்த  சிறப்பு எனலாம். மீனவர்  இனத்தை சேர்ந்தவர்களுக்கு  கடல் நீரும், உப்புக்காற்றை சுவாசிப்பதும் நோய் அதிகம் பாதிக்காததற்கு முக்கிய காரணம்.


இயற்கை தந்த வற்றை நாம் சரியான முறையில் பயன்படுத்தினால் நமக்கு அது ‘நண்பன்’ மாதிரி. நமக்கு இயற்கை தந்து கொண்டிருக்கும் இப்போதைய பாடம் Corona Virus , Lock  Down. இதற்கும் இயற்கையே நமக்கு  மருந்து தரும் என நம்புவோம்.


 


Popular posts from this blog

கொட்டிக்கிடக்கிறது வெட்டிவேரில் மகிமை

உமிழ் நீர் உயிர் நீர்