அஸ்வகந்தா மூலம் கொரோனா தடுப்பு மருந்து
*ஆயுஷ் அமைச்சகம் மூலமாக மத்திய அரசு ஆராய்ச்சி தொடங்குகிறது
*ஆயுஷ் & ஹெல்த், UGC மற்றும் ICMR அமைச்சகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.
*கொரோனா சிகிட்சையில், குணப்படுத்தும் மருந்தாக கருதப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ)மாத்திரையால் இதயம் பாதிக்கபடுவதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுர்வேத மூலிகையான அஸ்வகந்தாவை, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (H.C.Q.) -க்கு மாற்றாக கோவிட் தடுப்பு மருந்தாக இருக்க முடியுமா என தீர்மானிக்க மத்திய அரசு ஒரு ஆராய்ச்சியை முன்னெடுத்து வருகிறது.
"கோவிட் -19 உடன் போராடுவதில் H.C.Q. - வுக்கு பதிலாக அஸ்வகந்தாவின் மருத்துவ குணங்களை நாங்கள் அறிய விரும்புகிறோம். அஸ்வகந்தா மூலிகை, நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது என்பது அனைவரும் அறிந்ததே” என்று UGC துணைத் தலைவர் பூஷன் பட்வர்தன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் “இந்த ஆய்வு 400 சுகாதார ஊழியர்களை முன்னிறுத்தி நடைபெறுகிறது. சுகாதாரப் பணியாளர்களில் பாதி பேருக்கு அஸ்வகந்தா வழங்கப்படும், மற்றவர்களுக்கு H.C.Q. வழங்கப்படும், அவர்களின் உடல் நிலை கண்காணிக்கப்பட்டு, மருந்து எப்படி வேலை செய்கிறது, எந்த அளவிற்கு உடல் நிலை முன்னேற்றம் உள்ளது என்பதை பொறுத்து பிற நடவடிக்கைகள் தொடரும்.," என்று அவர் கூறினார்.
பக்க விளைவுகள் இல்லை
கோவிட் -19 க்கு இதுவரை எந்த தடுப்பூசியும் கிடைக்காத நிலையில், இந்த நோய் உலகம் முழுதும் பல லட்சம் பேரை பாதித்திருக்கிறது. எனினும் நோயாளிகளுக்கு பராமரிப்பு அளிக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு H.C.Q. நோய் தடுப்பு மருந்தாகவே தரப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொடர்பாக மருந்து பயன்படுத்துவது “சோதனைக்குரியது” என்று மார்ச் மாதத்தில் ICMR கூறியிருந்தது. "மருத்துவரின் மேற்பார்வை இல்லாமல் மருந்து எடுக்கக்கூடாது" என்று ICMR தொற்றுநோயியல் தலைவர் டாக்டர் ராமன் கங்ககேத்கர் மார்ச் 25 அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அமெரிக்க குடிமக்களும் H.C.Q. -ஐ அதிகமாக பயன்படுத்த வேண்டாம் என இந்தியாவில் பல மருத்துவ வல்லுநர்களும் எச்சரித்து வருகிறார்கள். தொடர்ந்து, அமெரிக்க உணவு கட்டுப்பாடு மற்றும் மருந்து நிர்வாகம் (F.D.A.) இதேபோன்ற எச்சரிக்கையை வெளியிட்டது, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் H.C.Q.-வை " Game Changer" என்று பாராட்டினார்.
அஸ்வகந்தா, H.C.Q., அளவிற்கு பக்க விளைவுகளை கொண்டிருக்கவில்லை. எனினும் இது பற்றி பேசிய ஆயுஷ் செயலாளர் ராஜேஷ் கோடெச்சா, 2010 ஆம் ஆண்டு இந்திய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வை மேற்கோள் காட்டி, H.C.Q. மற்றும் அஸ்வகந்தா இரண்டுமே நோய் எதிர்ப்பு சக்தியில் ஒத்துப்போவதாக கூறினார்.
"மிகவும் புகழ்பெற்ற ஒரு பத்திரிகை H.C.Q. மற்றும் அஸ்வகந்தா ஆகியவற்றை ஒரு இம்யூனோமோடூலேட்டராகப் பயன்படுத்துவதை ஒப்பிட்டு ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளது, மேலும் இவை இரண்டும் ஒரே மருத்துவ பலன்களையே தருகின்றன" என்று அவர் கூறினார்.
"அஸ்வகந்தா பற்றி நிறைய அனுபவ ஆதாரங்கள் உள்ளன. இருப்பினும், மூலிகை நிச்சயம் வேலை செய்யும் என்று உடனடியாக ஊகிக்க முடியாது. H.C.Q. -வைப் போலவே, அஸ்வகந்தாவும் நோய்த்தடுப்பு மருந்தாக, இதே போன்ற விளைவுகளை ஏற்படுத்துமா என்று அறிந்து கொள்ள முயற்சிக்கிறோம், ”என்று அவர் கூறினார். "ஆனால் அஸ்வகந்தாவால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது." என்பதையும் அவர் கூறினார்
அஸ்வகந்தா மற்றும் பிற ஆயுர்வேத மருந்துகளை கோவிட் -19 தடுப்பு மருந்துகளாக சோதிக்க வெவ்வேறு ஆராய்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன என்று கோடெச்சா கூறினார்.
"நாங்கள் ஒரு மருத்துவ நெறிமுறையை உருவாக்கும் வலுவான பயிற்சியைத் தொடங்கினோம். ஆய்வுகள் விஞ்ஞானிகள் குழுவை உள்ளடக்கியது மற்றும் ICMR-ல் தொழில்நுட்ப ரீதியாக ஆராயப்பட்டது, ”என்று அவர் கூறினார்.
"இந்த ஆய்வுகளை நடத்த நாங்கள் நிறைய மருத்துவ கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். (அஸ்வகந்தா) ஆய்வு வரும் வாரத்தில் தொடங்கி மூன்று மாதங்களில் முடிவுகள் கிடைக்கும், ”என்று அவர் மேலும் கூறினார். பாபா ராம்தேவின் பதஞ்சலியின் ஆய்வில் அஸ்வகந்தா ஒரு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தாக முன்மொழியப்பட்டுள்ளது.