ஊரடங்கிற்கு பிறகு என்ன செய்வது

கொரோனாவை வெல்வோம்



எதை தின்றால் பித்தம் தெளியும் என்பதே தற்போதைய உலகநாடுகளின் நிலை.
கோவிட் 19 என்ற கரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகமே பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில் கொரோனாவிலிருந்து தப்ப, என்ன செய்ய வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.


இந்திய முழுவதும் தற்போது ஊரடங்கு (Lock Down) என்பது தளர்வுக்கு வரக்கூடிய சூழ்நிலை உள்ளது. அனைவரும் பணி நிமித்தமாக, வெளியே சென்றாக வேண்டும். மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவேண்டும் அனைவரும் வெளியே வரும் பட்சத்தில் கொரோனா வைரஸின் பரவல் மீண்டும் அதிகமாகும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. எனவே, நம்மால் முடிந்தது, நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதும், அரசு சொல்லும் பாதுகாப்பு முறைகளை பின் பற்றுவதை தவிர, தற்போதைக்கு வேறு வழியில்லை.. நமது பாரதப் பிரதமர் கூறியது போல, கொரோனாவுடன் வாழப்  பழகிக்கொள்ள வேண்டும்.  


கபசுர குடிநீர்


நோய் எதிர்ப்பில் மிக முக்கியமானது கபசுர குடிநீர். கபசுர குடிநீர் கொரோனா மட்டுமல்ல பல தொற்று வியாதிகள் வராமல் தடுக்கும், மனித உடலில் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.


இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையைக் கூட்டி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நுரையீரல் சளியை அகற்றி சுருங்கி விரியும் தன்மையை பலப்படுத்தும்.


கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பும்; பாதிப்பு ஏற்பட்ட பின்பும் அனைவரும் அருந்தலாம்.


கொரோனாவை தற்காலிகமாக கட்டுப்பாட்டில் வைக்காமல் அதிலிருந்து முற்றிலும் தப்பலாம்.. கபசுர குடிநீர், கொரனாவை முற்றிலும் கட்டுப்படுத்தும் என தமிழக சித்த மருத்துவர்கள் உறுதியாக கூறுகிறார்கள்.


கபசுர குடிநீரின் மூலப்பொருட்கள்


சுக்கு, திப்பிலி, இலவங்கம், சிறுகாஞ்சொறி வேர், அக்கிரகாரம் வேர், முன்னி வேர், கடுக்காய்த் தோல், ஆடாதொடை இலை, கற்பூரவள்ளி இலை, கோட்டம், சீந்தில் தண்டு, சிறுதேக்கு, நிலவேம்பு சமுலம், வட்டத்திருப்பி வேர், கோரைக் கிழங்கு.

இந்த மூலப்பொருட்களை தேடி அலையை வேண்டாம். அரசு சித்த மருத்துவமனை மற்றும் நம்பகமான சித்த மருந்து விற்கும் கடைகளில் ரெடிமேடாக சூரண (Powder) வடிவில் கிடைக்கிறது.


உபயோகிக்கும் முறை       


5 கிராம் கபசுர சூரணத்தை 100 மில்லி தண்ணீரில் சேர்த்து கொதிக்கவைத்து 60 மில்லி அளவுக்கு வந்த பிறகு வடிகட்டி குடிக்கவும். இதே போன்று தினமும் 2 வேலை என்று 14 நாட்கள் அருந்த வேண்டும்.


பாதுகாப்பு முறைகள்


தவிர அனைவரும் நம் அன்றாட வாழ்வில் மாஸ்க் அணிய வேண்டும்.
ஏதேனும் சோப்புகளை பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவதையும் தொடரவேண்டும். பிறரை சந்திக்கும் பொது கைகுலுக்குவதை மறந்து இருகரம் கூப்பி வணக்கம் சொல்லப் பழகவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனாவின் தாக்கத்திலிருந்து தப்புவோம், கொரோனாவை வெல்வோம்.



Popular posts from this blog

கொட்டிக்கிடக்கிறது வெட்டிவேரில் மகிமை

உமிழ் நீர் உயிர் நீர்