கொரோனாவால் வரும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி
உளவியல் ஆலோசகர் முனைவர் துரை. சிவப்பிரகாசம் ஈரோடு. கைபேசி : 9442135600. கொரோனா வைரஸால் உலகெங்கும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். பச்சிளம் குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை பலரும் உயிரிழந்து வருகின்றனர். பல்வேறு நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு, ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பல நாட்களாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மக்கள், மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்களின் மனம் எப்போதும் கவலையிலேயே மூழ்கி இருக்கிறது. முன்பு விரும்பிச் செய்து வந்த செயல்களில் கூட தற்போது எந்தவிதமான ஈடுபாடும் இல்லாமல் இருக்கின்றனர். அளவிட முடியாத சோர்வுடன் உள்ளனர். பசியின்மையால் பிடித்தமான உணவுகளைக் கூட வேண்டாம் என்று புறக்கணிக்கின்றனர். போதிய தூக்கம் இல்லாமல் அவதிப் படுகின்றனர். எப்போதும் வரும் வருமானம் இல்லாததால் அதைப் பற்றி மிகுந்த கவலையுடன் இருக்கின்றனர். எதிர்காலத்தைப் பற்றிய பயம் வந்து விட்டது. இது மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த மன அழுத்தம் வேறு பல நோய்களையும் கொண்டு வர...