புத்துணர்வு தரும் நீரா பானம்
தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் ஒருவகைப் பானம்தான் ‘நீரா’. தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் இறக்கி விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள சூழலில், தமிழகத்தில் பரவலாக எல்லா இடங்களிலும் விற்கப்படுகிறது.
‘ஒரு டம்ளர் நீராபானத்தில் சோடியம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 1, பி -6 மெக்னீசியம், நீர்சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த நீராபானம் ஈரல் பாதிப்பு நோய்களை தடுக்கிறது, செரிமான மண்டலத்தை பாதுகாக்கிறது. மூல நோய்க்கு சிறந்த பானமாக இருக்கிறது, சிறுநீர் சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் ஏற்ற பானமாக இருக்கிறது. உடல் வெப்பம் சம்பந்தமான நோய்களை தீர்க்கிறது.
காலையில் வெறும் வயிற்றில் நீரா பானத்தை அருந்தும்போது இதன் முழுமையான மருத்துவ பயன்களை பெற முடியும். தொடர்ந்து, இப்பானத்தை, அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன், எலும்புக்கும் வலு கிடைக்கும். சர்க்கரை நோயாளிகளும், நீரா பானத்தை அருந்தலாம். மனித உடலுக்குத் தேவையான தாதுக்கள் மற்றும் நீர் சத்துக்கள் அதிக அளவு நீராவில் உள்ளது.
தோல் சுருக்கத்தை தடுக்கிறது. உடலுக்கு குளி்ர்ச்சியை அளிக்கிறது, தாகத்தை தணிக்கிறது, உடலுக்கு புத்துணர்வை தருகிறது. இதில் ஆல்கஹால் இருக்காது. இது கள் மாதிரி போதை தருகிற பானம் இல்லை. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அருந்தலாம். இது, குடிக்க மிகவும் சுவையாக இருக்கும்.
இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தொடர்ந்து படிக்க "ஹெல்த் டுடே" மாத இதழை Subscribe செய்யுங்க. ஒரு வருஷத்துக்கு சந்தா, ஜஸ்ட் ரூபாய் 360/- மட்டுமே. தொடர்புக்கு: 63819 63636.