போதிய அளவு தண்ணீர் அருந்தாவிட்டால் என்ன ஆகும்
ஒருவர் உணவு உண்ணாமல் கூட சில வாரங்கள் உயிர் வாழலாம் . ஆனால் தண்ணீர் அருந்தாமல் மூன்று நாட்களுக்கு மேல் உயிர் வாழ்வது கடினம் . உயிர் வாழ்வதற்கு உணவு எவ்வளவு அவசியமோ, அதை விட தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம் . ஒருவருடைய பாலினம் , வயது , எடை ஆகியவற்றிற்குத் தகுந்தவாறு ஒருவர் எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்பது கணக்கிடப் படுகிறது . சராசரியாக மனித உடலானது 50 - 70 % தண்ணீரால் ஆனது . தண்ணீர், ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு மட்டும் தேவையானது அல்ல . உடல் உறுப்புகள் தேய்மானம் அடையாமல் இருக்கவும் , உடலின் வெப்ப நிலையை சீராக வைத்துக் கொள்ளவும் , தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம் . மேலும் மூட்டுகள் வலுவாக இருக்கவும் , கண்கள் தெளிவாகத் தெரியவும் , தண்ணீர் அவசியம் . உடலிலிருந்து வியர்வை , சிறுநீர் , மலம் ஆகியவை வெளியேறும் போதும் , மூச்சை வெளியிடும் போதும், உடலிலிருந்து நீர் வெளியேறுகிறது . அப்போது உடலில் வறட்சி ஏற்படும் . போதிய அளவு நீரில்லாமல் உடல் வறட...