சிறுநீரக பாதிப்பும் அதன் சிகிச்சை முறைகளும்
சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம், நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பினால் உடலில் திரவம் மற்றும் தேவையற்ற பொருட்கள் சேர்ந்து இரத்தத்தின் அளவை அதிகரிப்பதினால் 'அசோடிமியா' மற்றும் யூரிமியா' ஏற்படுகிறது. அசோடிமியா என்பது எந்த அறிகுறியும் இன்றி இரத்தத்தில் யூரியா போன்ற நைட்ரஜன் பொருட்கள் அதிகரிப்பதாகும். யூரிமியா என்பது சிறுநீரகங்கள் செயல் இழப்பதினால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு ஆகும்.
சிறுநீரகம்
ஒவ்வொருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் வயிற்றிக்குள் ஆழமாக முதுகுப் புறமாக இடுப்புக்கு சற்று மேலே உள்ளன. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் “நெப்ரான்கள்” எனப்படும் அடிப்படை நுண்தமனி சிறுநீரக சுத்திகரிப்பு அலகுகள் (சல்லடை) சுமார் 10 இலட்சம் உள்ளன. இவை தொடர்ந்து ஓய்வில்லாமல் முக்கிய பணிகளை நாம் கருவாக இருந்த காலத்திலிருந்தே செய்து வருகின்றன. இதன் முக்கிய பணி நம் உடலில் உற்பத்தியாகும் கழிவு உப்புகளை வடிகட்டி சிறுநீராகப் பிரித்தும், அதிகமான தண்ணீரையும் வெளியே அனுப்புகின்றன. மேலும் நம் உடலில் இரத்தத்தில் பல்வேறு தாது உப்புக்களும், அதாவது பொட்டாசியம், சோடியம் பைகார்போனேட், இரசாயனங்களும் சமசீராக இருந்து உடல் இயக்கங்கள் நல்ல முறையில் இயங்க வைக்கும் இரசாயன கட்டுப்பாட்டுக் கேந்திரமாகவும் உள்ளன.
சிறுநீரகங்களின் பணிகள்:
இதயத்திலிருந்து வெளியாகும் இரத்தத்தை சிறுநீரகம் பெறுகிறது. அதிலிருந்து உடலுக்குத் தேவையான குளுக்கோஸ், அமினோ அமிலம், வைட்டமிங்கள், ஹார்மோன்கள் போன்றவற்றைத் தேக்கி வைத்துக் கொண்டு , தேவையற்ற யூரியா, குளோரைடு போன்ற கழிவுப் பொருட்களைப் பிரித்தெடுத்து வெளியேற்றும் முக்கியமான பணியைச் சிறுநீரகம் செய்கிறது. அதே வேளையில் சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அதிகரித்தால் அவற்றையும் சிறுநீரிரகத்திலிருந்து வெளியேற்றுகிறது. உடலில் நீரின் அளவைச் சமநிலையில் வைத்துக் கொள்கிறது. 'ரெனின்' எனும் ஹார்மோனைச் சுரந்து இரத்த அழுத்தத்தைச் சரியாக வைத்துக் கொள்கிறது. இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவைப்படுகின்ற ' எரித்ரோபாய்ட்டின் ' எனும் ஹார்மோனைச் சுரக்கிறது. 'வைட்டமின் டி' யைப் பதப்படுத்தி ' கால்சிட்ரியால் ' எனும் ஹார்மோனாக மாற்றித் தருகிறது. இது எலும்புகளின் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. உணவுச் சத்துகளின் வளர்சிதை மாற்றப் பணிகளுக்கு உதவுகிறது. உடலில் உற்பத்தியாகின்ற நச்சுப் பொருள்களையும் வெளியேற்றுவதுடன். நாம் சாப்பிடுகின்ற மருந்து, மாத்திரைகளில் நச்சுக்கள் இருந்தால் அவற்றையும் சிறுநீரில் வெளியேற்றுகிறது. நாம் சில மாத்திரைகளைச் சாப்பிட்டதும் சிறுநீர் மஞ்சளாகப் போவது இதனால் தான். தினமும் இரண்டுச் சிறுநீரகங்களும் சேர்ந்து ஒவ்வொருவருக்கும் உள்ள இரத்த அளவிற்கு தகுந்தாற்போல் சுத்தப்படுத்துகிறது. நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லிட்டர் சிறுநீரை உற்பத்தி செய்கிறது.
சிறுநீரகம் செயலிழப்பு ஏன்?
நாட்பட்ட சிறுநீரகம் செயலிழப்பு அல்லது கோளாறு என்பது சிறுநீரகமானது உடலின் கழிவு பொருட்களையும், அடர் கரைசலான சிறுநீரினை வெளியேற்றும் தன்மை மற்றும் உடலிலுள்ள தனிமப்பொருட்கள் சிறுநீரில் வெளியேறாமல் தடுத்து பாதுகாக்கும் தன்மை போன்றவற்றை படிப்படியாக இழந்து செயலற்ற தன்மை அதிகரிப்பதாகும்.
இதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் சிறுநீர் பிரிவது குறையும், பசி குறையும், வாந்தி வரும், தூக்கம் குறையும், கடுமையான சோர்வு , உடலில் அரிப்பு, முகம் மற்றும் கை கால்களில் வீக்கம் தோன்றுவது, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தோன்றும். சிறுநீரகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டால் கட்டாயம்" ட்யாலிசிஸ் " செய்ய வேண்டும்.
இரத்தத்தில் நீர் மற்றும் தாது உப்புகள் அதிகரித்தால் அதை பிரித்தெடுப்பது சிறுநீரகம் தான். உடல் நலப் பாதிப்புகளால் சிறுநீரகம் பாதிக்கப்படும் போது, நச்சுகளைப் பிரித்தெடுக்கும் திறன் பாதிக்கப்படும். சிறுநீரகங்களின் செயல்பாடு 85 லிருந்து 90 சதவீதம் குறைந்து ஒரு முடிவாகும் நிலையைத் தொடும்போது அப்போது சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்குச் செய்யப்படும் சிகிச்சை முறைதான் “டயாலிசிஸ்”.
டயாலிசிஸ் செய்வதில் இரண்டு வகைகள் இருக்கின்றன,
“பெரிட்டோனி
யல் டயாலிசிஸ்" மற்றும் “ஹிமோ டயாலிசிஸ்". நம் வயிற்றிலுள்ள “பெரிட்டோனியம்' "எனும் சவ்வைப் பயன்படுத்தி கழிவுகளை அகற்றும் முறை “பெரிட்டோனியல் டயாலிசிஸ்". இரத்தத்தை வெளியே ஒரு கருவிக்குள் செலுத்தி இரத்தத்தைச் சுத்தகரிக்கும் முறை “ஹிமோ டயாலிசிஸ்". டயாலிசிஸ் என்பது நிரந்தர தீர்வு கிடையாது. டயாலிசிஸ் சிகிச்சையிலிருந்து விடுபட, கீழ் குறிப்பிட்ட நம் நாட்டிலுள்ள மூலிகையிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்தை நோயின் தன்மைக்கேற்ப மூன்றிலிருந்து ஆறு மாதம் வரை உட்கொள்ள வேண்டும். மேலும் கீழே குறிப்பிட்ட முறையில் இஞ்சி ஓத்தடம் கொடுக்க வேண்டும்.
இஞ்சி ஓத்தடம்.
ஒரு பானையில் மூன்று லிட்டர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். 125 கிராம் இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டைப் போல் கட்டவும். இப்பொழுது கொதிக்கும் நீரில் மூட்டையிலுள்ள இஞ்சி சாற்றை நன்கு பிழிந்துவிட்டு, துணி மூட்டையும் போட்டு ஒரு தட்டைக் கொண்டு மூடவும். அடுப்பை குறைந்த தீயில் 20-25 நிமிடங்கள் வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும். சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றி விட்டு தலை குப்புற படுக்க வைக்கவும். பிறகு ஒரு சிறு துணியை கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து வேறு ஒரு கிண்ணத்தில் பிழிந்து, அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடி பகுதியில் விரித்து போடவும். சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து விரித்து முதுகில் பானையிலுள்ள நீர் ஆறும் வரை அரை மணி நேரம் தொடர்ந்து போடவும்.
சிறுநீரகம் புத்துணர்ச்சி அடைந்து யூரிக் ஆஸிட், கிரியேட்டினின் அளவை சமச்சீராக கொண்டு வந்து , சிறுநீரகத்தின் செயல்பாடு தினமும் 50 மி.லி ( 5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து 650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றுவதின் மூலம் சிறுநீரை பெருக்கி , உடலிலுள்ள தேவையில்லாத உப்புகளையும், நச்சுகளையும் வெளியேற்றி அதன் மூலம் இரத்தத்தை சுத்தம் செய்து இந்த டயாலிசிஸ் செய்யவேண்டிய நிலையை தவிர்த்து வாழ் நாள் முழுவதும் ஆரோக்கியமுடன் வாழலாம்.
மூலிகை விபரம்: (1). பூனை மீசை. (2) மூக்கரட்டை . (3) காசினிகீரை. (4) சிறுபீளை (5)நெருஞ்சில். (6) பரங்கிவிதை இவைகளின் பொடி, ஆகாயத்தமரை காம்பௌண்ட் கேப்சூல் மற்றும் சில மருந்துகள்.
மருந்து சாப்பிட வேண்டிய முறைக்கும் மற்ற விரங்களுக்கு மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
- மருத்துவர் ம.நடராஜன், அரசு பதிவு பெற்றவர். | செல்: 9444167098 ; 9962006111