Posts

Showing posts from March, 2020

நாம் ஏன் முற்றிலும் பழுத்த வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும்

Image
முற்றிலும் நன்கு பழுத்த வாழைப்பழங்களின் தோலில் இருக்கும் பழுப்பு திட்டுகளில் TNF (Tumor Necrosis Factor) என்ற வேதிப்பொருள் ஒழுங்கற்ற செல்களை அழிக்கவல்லது. எந்த அளவுக்கு கறுப்பு திட்டுக்கள் அடர்ந்து இருக்கிறதோ அந்த அளவுக்கு அது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மேலும் புற்றுநோய் உருவாகும் அபாயத்திலிருந்து காக்கும். தினமும் இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும் உடலை ஆரோக்கியமாக வைத்திடவும், உடல் எடையை குறைக்கவும், மேலும் கண் பார்வையையும் மேம்படுத்தும்.

தேனின் மகத்துவம்

Image
மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் ஊறும். எலுமிச்சம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குறையும். ஆரஞ்சு பழச் சுளையில் தேன் கலந்து சாப்பிட்டால் தூக்கம் வரும். தேங்காய் பாலுடன் தேன் கலந்து சாப்பிட குடல் புண், வாய்ப்புண் குணமாகும். இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும். சுண்ணாம்பில் தேன் கலந்து கட்டிகள் உள்ள இடத்தில் தடவ, வீக்கம் குறையும், கட்டிகள் ஆறிவிடும்.

மரு மற்றும் ஆணிகளுக்கான எளிய தீர்வுகள்

Image
மனித பாபிலோமா (human papilloma) என்னும் வைரஸால் மருக்கள் உண்டாகின்றன. மருக்கள் சிறியதாக சதை புடைத்து கால் பாதம் அல்லது கை விரல்களில் ஏற்படுகின்றன. இருவருக்கு இடையே ஏற்படும் ஒரு சாதாரண தொடர்பால் கூட இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தொற்றும் என்கிறார்கள். அனால் இவற்றை சில மாதங்களிலேயே நம்மால் எளிதாக குணப்படுத்த முடியும். சில சமயங்களில் மருக்கள் வேகமாக வளர வாய்ப்பு இருப்பதால் அவற்றை முறையாக கவனிக்க வேண்டும். குறைந்த நோய் எதிர்ப்பு அமைப்பால் மருக்கள் ஏற்படுகின்றன. கணக்கில்லாத வகையான மருக்கள் இருந்தாலும், உங்கள் பாதங்களில் ஏற்படும் மருக்களின் பெயர் பால்பர் மருக்கள். கால் பாதங்களின் அடிப்பாகத்தில் உண்டாகும் கடினமான, தடித்த தோல் பகுதி ஆணி என கூறப்படுகிறது. ஆணிகள் பெரும்பாலும் ஒருவிதமான வெளிப்புற அழுத்தத்தால் கால் விரல்களுக்கு நடுவிலோ அல்லது அவற்றை சுற்றியோ ஏற்படுகிறது. கால் விரல்களுக்கு ஏற்படும் தொடர் அழுத்தமே இதற்கு காரணமாகும். வெகு நேரம் நிற்பது, மிக இறுக்கமான காலணிகளை அணிவது, காலுறை அணியாமல் ஷூ போடுவது, அதிக உயரமான குதிகால் பகுதியுடைய  செருப்பு அணிவது போன்றவை கால் பாதத்தின் ...

சிறுநீரக பாதிப்பும் அதன் சிகிச்சை முறைகளும்

Image
சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம், நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பினால் உடலில் திரவம் மற்றும் தேவையற்ற பொருட்கள் சேர்ந்து இரத்தத்தின் அளவை  அதிகரிப்பதினால் 'அசோடிமியா' மற்றும் யூரிமியா' ஏற்படுகிறது. அசோடிமியா என்பது எந்த அறிகுறியும் இன்றி இரத்தத்தில் யூரியா போன்ற நைட்ரஜன் பொருட்கள் அதிகரிப்பதாகும். யூரிமியா என்பது சிறுநீரகங்கள் செயல் இழப்பதினால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு ஆகும். சிறுநீரகம் ஒவ்வொருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் வயிற்றிக்குள் ஆழமாக முதுகுப் புறமாக இடுப்புக்கு சற்று மேலே உள்ளன. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் “நெப்ரான்கள்” எனப்படும் அடிப்படை நுண்தமனி சிறுநீரக சுத்திகரிப்பு அலகுகள் (சல்லடை) சுமார் 10 இலட்சம் உள்ளன. இவை தொடர்ந்து ஓய்வில்லாமல் முக்கிய பணிகளை நாம் கருவாக இருந்த காலத்திலிருந்தே செய்து வருகின்றன. இதன் முக்கிய பணி நம் உடலில் உற்பத்தியாகும் கழிவு உப்புகளை வடிகட்டி சிறுநீராகப் பிரித்தும், அதிகமான தண்ணீரையும் வெளியே அனுப்புகின்றன. மேலும் நம் உடலில் இரத்தத்தில் பல்வேறு தாது உப்புக்களும், அதாவது பொட்டாசியம், சோடியம் பைகார்போனேட், இரசாயனங்களும் சமசீராக இருந்து...

உங்க ஆடும் பல்லை வலுவாக்கனுமா?

Image
பற்கள் ஆடினால் உடனே அவற்றை பிடுங்கத்தான் வேண்டுமா அல்லது அவை விழும் வரை காத்திருக்கனுமா? தேவையில்லை. உங்கள் ஈறுகளை வலுவாக்கினால் ஆடும் பல்லைக் கூட நிறுத்த முடியும். அனுபவப் பூர்வமாக சிலரருக்கு நடந்துள்ளதால் உங்களுக்காக இந்த குறிப்புகள் தரப்பட்டுள்ளன. பல் ஆடுவதற்கு என்ன காரணம் ? உங்கள் பல் ஆடுவதற்கு பலவீனமான ஈறு மற்றும் பற்கள் காரணம். மோசமான பராமரிப்பு மிக முக்கிய காரணம். பற்சொத்தை ஏற்படுவதாலும் பற்கள் ஆடத் தொடங்கும். எனவே ஆடும் சமயத்தில் பற்கள் மற்றும் ஈறுகளின் மீது கவனம் செலுத்தினால் பற்கள் ஆடாமல் மேலும் வலுவாக்க முடியும். அப்படியான குறிப்புகளை பார்க்கலாம். தேவையானவை : நல்லெண்ணெய் - கால் கப் நெல்லிக்காய் பொடி - கால் கப் மஞ்சள்- 1 ஸ்பூன் பட்டைப் பொடி - கால் ஸ்பூன் கிராம்புப் பொடி - அரை ஸ்பூன் கல் உப்பு - 1 ஸ்பூன். மேற்சொன்ன பொடிகளை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இதுதான் மூலிகைப் பொடி. மஞ்சள், பட்டை, கிராம்பு, கல் உப்பு போன்றவற்றையும் ஒன்றாக கலந்து பொடி செய்து கொள்ளலாம். அல்லது நேரடியாக பொடியாகவும் வாங்கிக் கொள்ளலாம். நல்லெண்ணெய் லேசாக சூடுபடுத்திக் கொண்டு அதில் இந்த பொடிகளை கலக்க வேண்டும்....