பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியும
பிரியாணி இலையின் ஆங்கில பெயர் Bay leaf
பலரும் உணவில் பிரியாணி இலை வெறும் நறுமணத்திற்காகத் தான் சேர்க்கிறார்கள் என்று நினைக்கிறோம். ஆனால் பிரியாணி இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. சொல்லப்போனால் பிரியாணி இலையில் ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை உள்ளதால், பல்வேறு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
பிரியாணி இலையில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள்..!
பிரியாணி இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள், கனிமச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, செலினியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவையும் அதிகம் நிறைந்துள்ளது.
இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய இந்த இலையை உணவில் சேர்க்கும் போது, அதனால் எவ்வளவு நன்மை கிடைக்க வாய்ப்புள்ளது என்று சற்று யோசித்துப் பாருங்கள்.
மனிதனாக பிறந்த அனைவருக்கும் பல பிரச்சனைகள் இருக்கும். அதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். அதற்காக யோகா, தியானம் என பல வழிகளை தேடி செல்கிறோம். அதற்கு எளிய வழியாக நம் வீட்டில் இருக்கும் பிரியாணி இலை தீர்வாகிறது.
இது சமையலில் உணவின் மணத்தையும், ருசியையும் அதிகரிக்க மட்டுமின்றி அதன் நறுமணம் பல அரோமாதெரபிகளில் சுவாச பிரச்சனை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.
இதை கண்டுபிடித்தவர் ரஷ்ய ஆய்வாளர் கென்னடி. இவரின் கூற்றுப்படி பிரியாணி இலை மன அழுத்தத்தைக் குறைப்பதாக கூறியுள்ளார்.
முதல் கட்டமாக மனதை அமைதி அடையச் செய்வதற்கு பிரியாணி இலையை வீட்டின் ஒரு அறையினுள் ஒரு பாத்திரத்தில் போட்டு 10 நிமிடம் எரிக்க வேண்டும். பின் அந்த அறையிலேயே 10 நிமிடம் இருந்து அதன் நறுமணத்தை நன்கு சுவாசிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் பிரியாணி இலையின் நறுமணம் தீங்கு விளைவிக்கும் மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைத்து மனதை அமைதியுடனும் ரிலாக்ஸாகவும் வைத்துக் கொள்ளும்.
மேலும் பிரியாணி இலையை வீட்டினுள் எரித்தால் வீட்டில் இருக்கும் துர்நாற்றம் வெளியேறி வீடே நல்ல நறுமணத்துடன் இருக்கும். மேலும் இந்த நறுமணம் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை உற்பத்தி செய்யும்.
பிரியாணி இலை பயன்கள்:-
- செரிமானத்துக்கு:-
பெருங்குடலிலும் வயிற்றிலும் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய தன்மை பட்டை இலைகளில் உள்ளது. சில வகை உணவுகள் சுலபமாகச் செரிமானம் ஆகாது. அவற்றின் செரிமானத்திற்குப் பட்டை இலையில் உள்ள enzymes எனும் மூலப் புரதப்பொருள் உதவுகிறது.
- இதயத்திற்கு:-
பட்டை இலைகளில் உள்ள caffeic acid என்ற அமிலமும் rutin என்ற பொருளும் இதயத்தில் உள்ள மெல்லிய இரத்தக் குழாய்களை வலுவுறச் செய்கின்றன.
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கொழுப்புச்சத்தை நீக்கவும் அவை உதவும்.
- நீரிழிவு நோய் இருப்போருக்கு:-
பட்டை இலைகள் உடலில் சுரக்கும் இன்சுலினை மேம்படுத்துகின்றன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்கும்.
- மன அழுத்தத்தைக் குறைக்க:-
பட்டை இலைகளில் உள்ள linalool எனும் இரசாயனம் மன அழுத்தத்தின் அறிகுறிகளை எதிர்க்க உதவுகிறது.
- வீக்கத்தைக் குறைக்க:-
வீக்கத்தைக் குறைப்பது இவ்இலைகளின் முக்கிய பயன்களில் ஒன்று. மூட்டுவாதம் ஏற்படும் சாத்தியத்தை இது குறைக்கிறது.
- வலி நிவாரணம்:-
பிரியாணி இலையில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய் உடலில் ஏற்படும் பல மூட்டு வலிகளைக் குறைக்கும். அதிலும் தலை வலிக்கும் போது, அந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால், 1 நிமிடத்தில் தலை வலி போய்விடும்.
- புற்று நோய் எதிர்ப்பு பொருள்:-
பிரியாணி இலையில் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்களான காஃப்பிக் அமிலம், க்யூயர்சிடின் மற்றும் யூஜினால் போன்றவை உள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடை செய்து வெளியேற்றி, புற்றுநோய் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்.