கொள்ளின் மகத்துவம்

கொள்ளில் உள்ள சத்துக்கள்


கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், நார்ச்சத்து.



பயன்கள்:


சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், உடல் எடையை குறைக்கும், விந்தணுக்களை அதிகரிக்கும், சிறுநீரக கற்களை வெளியேற்றும், மலச்சிக்கலைப் போக்கும், வெள்ளைப்படுதலை குணமாக்கும், கெட்ட கொழுப்பை உடலில் இருந்து நீக்கும், சருமத்தைப் பாதுகாக்கும், மாதவிடாயை ஒழுங்குபடுத்தும், பேதியை கட்டுப்படுத்தும்.


பயன்படுத்தும் முறைகள்



  • கொள்ளை வேக வைத்து உண்பதால் விந்து உற்பத்தியாகும்.

  • மிளகு சேர்த்து வேகவைத்து உண்டுவர இருமல் தீரும்

  • ஒரு தேக்கரண்டி அளவுக்கு பொடியும், சீரகப் பொடியும் வெந்நீரில் சேர்த்து வெறும் வயிற்றில் குடித்துவர உடல் எடை குறையும்.

  • கொள்ளை கொதிக்க வைத்து அந்த நீரைப் பருக, கழிச்சல் சரியாகும்.

  • ஒரு பங்கு கொள்ளுடன் 10 பங்கு நீர் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் அரை தேக்கரண்டி இந்துப்பு சேர்த்து பருகிவர சிறுநீரகக் கற்கள் கரையும்.

  • கொள்ளு குடிநீருடன், சுக்குத் தூளும், பெருங்காயமும் சேர்த்து குடித்தால் செரிமான பிரச்சனை தீரும்.

  • உணவில் அதிக கொள்ளை சேர்த்துக்கொள்ள ரத்த அணுக்கள் கூடும்.

  • இரவில் கொள்ளை ஊறவைத்து காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து மூன்று வேளையும் 60 மில்லி அளவு குடிக்க பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

  • முளைக்கட்டிய கொள்ளு பயிரை சுண்டல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

  • கொள்ளை மசித்து அதனுடன் நல்லெண்ணெய் விட்டு சாப்பிட வயிற்றுப்புண் குணமாகும்.

  • இரவில் நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த கொள்ளை அப்படியே சாப்பிட்டு வர மூலம் நீங்கும்.

  • இரவில் ஊறிய கொள்ளை அப்படியே மசித்து முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வர முகம் பொலிவு பெறும்.


- M. ஞானசேகர், 95662 53929


Popular posts from this blog

கொட்டிக்கிடக்கிறது வெட்டிவேரில் மகிமை

உமிழ் நீர் உயிர் நீர்