அதிகாலை எழும் பழக்கம்
- அதிகாலை எழும் பழக்கம் வேண்டும் தம்பி
அதிநன்மை பெறுவாயே அறிவாய் தம்பி
மதிநலமும் உடல்நலமும் சிறக்கும் தம்பி
முடிவெடுக்கும் திறன்நன்றாய் பெருகும் தம்பி
- அறிவாற்றல் அதிகரிக்கும் உடற்பயிற் சிக்கு
அதிகமான நேரமதை ஒதுக்க நேரும்
தறிகெட்டு அலைகின்ற மனதை நித்தம்
தடுமாறச் செய்திடுமே காலைத் தூக்கம்
- இரவுதூக்கம் நேரத்திற்கு வந்தே நிற்கும்
இளங்காற்றைச் சுவாசிப்பதால் நோயும் ஓடும்
சரியான நேரத்திற்கு கழிவு நீங்கும்
சிறுநீரகம் கல்லில் சீராய் ஆகும்
- நுரையீரல் வலுவடையும் சைனஸ் வாரா
நூறுவயது தாண்டிவாழ துணையாய் நிற்கும்
நீரிழிவு நோய்என்றும் அணுகி டாது
நிலையான நல்வாழ்வு நித்தம் கிட்டும்
- உடல்பருமன் இல்லாத நிலையை ஆக்கும்
உடலிலுள்ள நச்சுக்கள் நீங்கும்; இன்பம்
மடைதிறந்த வெள்ளமெனப் பொங்கும் நாளும்
மதிமயக்கும் அதிகாலை தூக்கம் போக்கி
- தடையில்லா ஆற்றலினைப் பெறுதல் வேண்டின்
தயக்கமின்றி அதிகாலை எழுதல் நன்றே!
விடைதெரியா நோய்களையே விரட்ட வேண்டின்
விரைந்தெழுந்து பணிசெய்து வாழ்வோம் நன்றே!