கொள்ளின் மகத்துவம்
கொள்ளில் உள்ள சத்துக்கள் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், நார்ச்சத்து. பயன்கள் : சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், உடல் எடையை குறைக்கும், விந்தணுக்களை அதிகரிக்கும், சிறுநீரக கற்களை வெளியேற்றும், மலச்சிக்கலைப் போக்கும், வெள்ளைப்படுதலை குணமாக்கும், கெட்ட கொழுப்பை உடலில் இருந்து நீக்கும், சருமத்தைப் பாதுகாக்கும், மாதவிடாயை ஒழுங்குபடுத்தும், பேதியை கட்டுப்படுத்தும். பயன்படுத்தும் முறைகள் கொள்ளை வேக வைத்து உண்பதால் விந்து உற்பத்தியாகும். மிளகு சேர்த்து வேகவைத்து உண்டுவர இருமல் தீரும் ஒரு தேக்கரண்டி அளவுக்கு பொடியும், சீரகப் பொடியும் வெந்நீரில் சேர்த்து வெறும் வயிற்றில் குடித்துவர உடல் எடை குறையும். கொள்ளை கொதிக்க வைத்து அந்த நீரைப் பருக, கழிச்சல் சரியாகும். ஒரு பங்கு கொள்ளுடன் 10 பங்கு நீர் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் அரை தேக்கரண்டி இந்துப்பு சேர்த்து பருகிவர சிறுநீரகக் கற்கள் கரையும். கொள்ளு குடிநீருடன், சுக்குத் தூளும், பெருங்காயமும் சேர்த்து குடித்தால் செரிமான பிரச்சனை தீரும். உணவில் அதிக கொள்ளை சேர்த்துக்கொள்ள ரத்த அணுக்கள் கூடும். இரவில் கொள்ளை ஊறவைத்து காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து...