மஞ்சள் தூள் மகத்துவம்

மஞ்சள் தூள் மகத்துவம்



மஞ்சள் தூளை தினமும் சமையலில் கட்டாயமாக சிறிதளவு சேர்க்க வேண்டும். இது கிருமி நாசினியாக செயல்பட்டு, உடலில் வரும் நோயை எதிர்த்துப் போராடும் குணம் கொண்டது.


இருமல், சளியை சரி செய்யக்கூடியது. தினமும் பாலில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து பருகினால் எல்லா வியாதிகளுக்கும் மருந்தாகக் கூடியது. குழந்தைகளுக்கு, பிறந்தவுடன் உடம்பில் பூலாங்கிழங்கு, மஞ்சள் தூள் தேய்த்து குளிக்க வைத்தால் பிணிகள் அண்டாது. பருவம் வந்த பெண்களுக்கு முகத்தில் அதிக கேசம் தெரிந்தால் மஞ்சள் தேய்த்து குளித்துவர சிறிது நாட்களில் முகத்தில் நல்ல மாற்றம் தெரியும்.


மஞ்சள் தூளை தண்ணீரில் கலந்து வாசலில் தெளிப்பது எதற்காக தெரியுமா? பொதுவாக பூச்சிகளுக்கு மஞ்சள்  வாசனை  என்றால் அலர்ஜி. தவிர திருஷ்டிக்கு என்றும் கூறுவது வழக்கம். நம் முன்னோர்கள், எல்லாம் அறிவியலோடு சேர்த்து சடங்கு சம்பிரதாயங்களை கண்டுபிடித்து வைத்தார்கள், நாம் அதைப் பின்பற்றி வருகிறோம்.


 தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தொடர்ந்து மஞ்சள் தூள் தேய்த்து வந்தால், சாதாரணமாக உள்ள அரிப்புகளும் ஆரம்ப நிலையிலேயே சரியாகிவிடும். வெயில் காலங்களில் வரும் (வேனல்) கட்டிகளுக்கு மஞ்சள்தூள், வாஷிங் சோப்பு சேர்த்து தடவினால், மூன்றே நாட்களில் கட்டி பழுத்து உடைய வாய்ப்புண்டு. ஆக மஞ்சளில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது, மகத்துவமானது.


Popular posts from this blog

கொட்டிக்கிடக்கிறது வெட்டிவேரில் மகிமை

உமிழ் நீர் உயிர் நீர்