வெண்டைக்காயின் மகத்தான மருத்துவ பயன்கள்


வெண்டைக்காய் உண்மையில் ஒரு சர்வரோக நிவாரணி. வெண்டைக்காயின் சிறப்பே அதன் கொழகொழப்புத் தன்மைதான். அது ஒரு உடல் ஆரோக்கிய மருந்து. வெண்டைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்.



  1. வைட்டமின் ஏ,சி,கே, பி1(தயாமின்), பி6(பைரிடாக்ஸின்), பி2(ரிபோப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டாதெனிக் அமிலம், தாது உப்புக்களான கால்சியம், காப்பர், மெக்னீசியம், இரும்புசத்து, பாஸ்பரஸ், மாங்கனீசு, செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரதம், நார்சத்து, குறைந்தளவு எரிசக்தி மேலும் பைட்டோ நியூட்ரியன்களான பீட்டா கரோடீன், அகியவைகள் காணப்படுகின்றன.


மருத்துவ பயன்கள்:


வெண்டைக்காய் வாங்கும் போது அதன் நுனியை உடைத்தால் பட்டென்று உடைய வேண்டும். அது தான் இளமையானதாகவும், புதியதாகவும் இருக்கும். அதை நன்றாக அலசி கழுவி சமைக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்களாவது வெண்டைக்காயை சமையலில் சேர்த்து கொள்வது குடும்பத்திலுள்ள அனைவருக்கும் நல்லது.


இந்த வெண்டைக்காயை திரவ வடிவில் உட்கொண்டால், அதனால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.


இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் நான்கு வெண்டைக்காயை நீட்டுவாக்கில் நான்கு பகுதியாக பிளந்து, இரவு முழுவதும் ஊறவைத்து. மறுநாள் காலை வடிகட்டி வெறும் வயிற்றில் பருகி வர வேண்டும்.


அதனால் ஏற்படும் பலன்கள் கிழே கொடுக்கப் பட்டுள்ளன.



  1. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இந்நீரை பருகுவதின் மூலம் குடல் இயக்கம் சீராகி, இதனால் மலச்சிக்கல், வாயு தொந்தரவுகள் உள்ளிட்ட சீரண பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும். நீரிழிவு நோய் குணமாகும். மலசிக்கல் தான் அனைத்து நோய்களுக்கும் மூலக்காரணம். அத்துடன் வாய் நாற்றமும் அகலும்.

  2. இதில் உள்ள கரையும் நார்ச்சத்து, கொலஸ்ட்ரால் (கொழுப்பு சத்து) அளவைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் இதில் அதிக அளவுள்ள பொட்டசிய்ம் உடலில் உள்ள சோடியத்தின் அளவினை சரி செய்து அதன் மூலம் இரத்ததின் அழுத்தமானது சீராகி இருதய நோய் அபாயம் குறைகிறது. தவிர ஆன்ட்டி , ஆக்சிடண்ட்ஸ் புற்று நோய்க்குக் காரணமான செல்களின் வளர்ச்சியையும் கட்டுபடுத்துகிறது.

  3. இந்த நீரை பருகுவதால், எலும்புகள் வலிமை அடைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்பு பலமற்று மெல்லியதாய் மாறும் நோய்) பிரச்சனை வருவது தடுக்கப்படும். எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க நினைத்தால், வெண்டைக்காய் நீரை தினமும் குடித்து வரவேண்டும்.

  4. இது மூளை சுறுசுறுப்பாய் செயல் படவும், புத்திக் கூர்மையை அதிகரிக்கவும் செய்யும்.

  5. ஆஸ்துமா (சுவாசப் பிரச்சினை) போன்ற சுவாசக் கோளாறுகள் கட்டுப்படும். நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைந்து காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கம் குறையும்.

  6. வெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள் பெருங்குடல் பாதையைச் சுத்தம் செய்து குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கின்றன.

  7. வெண்டைக்காயில் பீட்டா கரோட்டின் (உயிர் சத்து 'ஏ') இருப்பதால், கேட்ராக்ட் (கண் புரை நோய்) மற்றும் குளுக்கோமா (கண் அழுத்த நோய்) பிரச்சனைகளை தவிர்க்கிறது. பார்வை திறன் நன்கு மேம்பட உதவுகிறது.

  8. இரத்த விருத்திக்கு உதவும். சரும அழகைக் கூட்டும். பரு வருவது தடுக்கப்படும்.

  9. வெண்டைக்காயை கொதிக்க வைத்த தண்ணீரில் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கூந்தலை அலசினால், தலைமுடி பளபளப்பாகும். மேலும் கூந்தல் உதிர்தலையும் தடுக்கும்.


- சித்த மருத்துவர்: ம.நடராஜன். அரசு பதிவு பெற்றவர் | M: 94441 67098/ 99620 06111


Popular posts from this blog

கொட்டிக்கிடக்கிறது வெட்டிவேரில் மகிமை

உமிழ் நீர் உயிர் நீர்