இப்ப தேனும் கசக்கிறது முன்னணி இந்திய நிறுவனங்களின் தேனில் சர்க்கரை பாகு கலப்படம், சோதனையில் அம்பலம்... சமீபத்தில் சில பிரபலமான நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவரும் தேன், தூய்மைக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய இந்த சோதனையில், பல நிறுவனங்களின் தேனில் செயற்கை சர்க்கரை பாகை கலப்படம் செய்திருப்பது தெரியவந்தது.* மருத்துவத்தில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. தேன் பொதுவாக உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடிய ஒரு உணவுப்பொருள். தற்போது தொற்றுநோய் பரவி வரும் நிலையில் தொற்றுநோயை எதிர்த்து போராடும் குணம் தேனுக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், அதனுடன் சர்க்கரை சேர்ந்தால் உடலுக்கு ஆரோக்கியம் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். இந்நிலையில், மூலக்கூறு மட்டத்தில் ஒரு பொருளின் கலவையை அறிவதற்கான இந்த சோதனை (என்.எம்.ஆர் சோதனை) ஜெர்மனியில் உள்ள ஒரு ஆய்வகத்தில் செய்யப்பட்டுள்ளது. தேனை ஏற்றுமதி செய்ய விரும்பும் இந்திய நிறுவனங்களுக்கு இந்த சோதனை தேவைப்படுகிறது. அந்த வகையில் டாபர், பதஞ்சலி, பைத்யநாத்...
Posts
உமிழ் நீர் உயிர் நீர்
- Get link
- X
- Other Apps
சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்? உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து! உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக் கொண்டனர். வாழ்வதற்காக உண்டனர். உண்பதற்காக வாழ்ந்தனர். அதனால் தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவை பற்களால் நன்றாக மென்று சாப்பிட்டனர். குழந்தைகளுக்கும் பழக்கப் படுத்தினார்கள். அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்திருந்தது. வயிற்றுக்குள் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர். உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை. தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது. நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கண...
மன அழுத்தத்தை போக்கும் பாலாசனம்
- Get link
- X
- Other Apps
நம் உடலில் சேரும் கழிவுப் பொருட்கள் மற்றும் ரத்தத்தில் தேக்கமடையும் கழிவு பொருட்களை அவ்வப்போது நீக்கப்பட வேண்டும் எனில் எளிமையான உடற்பயிற்சிகள் உடலுக்கு அவசியம். அப்படியான பயிற்சிகளில் யோகாசனப் பயிற்சியை சிறந்தது எனலாம். இது உடலை பிற பயிற்சிகளை போல் இருக்க செய்வதில்லை. எனவே அனைத்து உறுப்புகளுக்கும் தடையில்லாமல் ரத்தம் பாய்ந்து ஆரோக்கியத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நாம் இங்கு பார்க்கப்போவது மன அழுத்தத்தை போக்கும் பாலாசனம் என்னும் பயிற்சியை. பாலப் பருவம் என்றால் குழந்தைப் பருவத்தை குறிக்கும். குழந்தை முதலில் அமர்வதற்கு தேர்ந்தெடுக்கும் ஒரு ஆரோக்கியமான இருக்கை முறையை நம்முடைய ஆரோக்கியத்திற்கும் பயின்று கொள்ள வலியுறுத்துவதால் இதற்கு “பாலாசனம்” என்று பெயர். இந்த ஆசனத்தை செய்வது மிக எளிது. இது மன அழுத்தத்தை நீக்கும் அற்புத ஆசனம் எனலாம். செய்முறை இரண்டு கால்களையும் மடக்கி வஜ்ராசனத்தில் அமர்வது போல் முழங்கால்கள் மீது அமரவும். அதன் பின் இரண்டு கைகளையும் முன்னோக்கி நீட்டி குழந்தைகள் படுப்பது போல் நெற்றி தரையில் படும்படி குனியவும். மூச்சை சீராக விடவும். இதே நிலையில் 15 முதல் 20 வினாடிகள் அ...
கொட்டிக்கிடக்கிறது வெட்டிவேரில் மகிமை
- Get link
- X
- Other Apps
வெட்டிவேரினை எலுமிச்சை வேர் எனவும் கூறுவார்கள். நீர்கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் வெட்டி வேரை சுத்தம் செய்து, உலர்த்தி, பொடி செய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகத்தைப் பொடிசெய்து சம அளவு எடுத்து வெந்நீரில் 200 மி.கி. குடித்து வந்தால் தீர்வு கிடைக்கும். கோடையில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்கும் வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சூடு, நாவறட்சி, தாகம், காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். மேலும் சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும். வெட்டிவேர் எண்ணையை கொண்டு நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் வடுக்கள் மீது தடவி வந்தால் அவை மறைந்துவிடும். இந்த எண்ணையை தேய்த்துக் குளிக்கலாம் சீயக்காய்க்கு பதில் வெட்டிவேரின் பவுடரை பயன்படுத்துங்கள். இதை தொடர்ந்து செய்தால் முகத்தில் எண்ணெய் வழியாது, முகம் கூடுதல் அழகுடன் காணப்படும். வெயில் காலத்தில் உண்டாகும் அதிக வியர்வை மற்றும் அரிப்பிற்கு வெட்டி வேரை நீரில் ஊறவைத்து, அரைத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம...
வைரஸை சமாளிக்கும் முருங்கை
- Get link
- X
- Other Apps
எந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும் எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கைக்குதான். நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் எந்த வைரஸும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது. நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள என்னவெல்லாம் சாப்பிடலாம் என பெரிய லிஸ்ட் போட்டு யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. பத்து ரூபாய்க்கு கிடைக்கும் முருங்கைகீரை அல்லது இரண்டு முருங்கைக்காய் போதும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உபயோகித்தால், நமது நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு உயர்த்திக் கொள்ளலாம். முருங்கையில் வைட்டமின் C ஆனது ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதை விட 7 மடங்கு அதிகமாக உள்ளது. முருங்கையில் வைட்டமின் A ஆனது கேரட்ல் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது. முருங்கையில் வைட்டமின் B2 ஆனது வாழைப்பழத்தில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது. வைட்டமின் B3 ஆனது வேர்க்கடலையில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது. முருங்கையில் கால்சியம் சத்து பாலில் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது. முருங்கையில் புரோடீன்(புரத) சத்து பாலில் உள்ளதை விட 2 மடங்கு அதிகமாக உள்ளது. முருங்கையில் மெக்னேஷியம் சத்து முட்டையில் உள்ளதை விட 36 மடங்கு அதிக...
நரைமுடியை கருமையாக மாற்றும் ஹேர் ஆயில்
- Get link
- X
- Other Apps
நமது அழகில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல் அழகு தான். அதிலும் கருகருவென அலைபாயும் கூந்தல் என்றால் உங்கள் அழகை பலமடங்கு கூட்டியே காட்டும். அழகை மட்டுமா, உங்கள் இளமையையும் சேர்த்து தான். ஆனால் இளம் வயதிலேயே உங்கள் கூந்தல் நரைத்து விட்டால் என்ன நடக்கும். உங்கள் இளமையும் வயதான தோற்றம் பெற்று விடும். இந்த இளநரையை நீங்கள் என்ன தான் மறைக்க முயன்றாலும் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காமல் நேரம் வீணானது தான் மிச்சமாக இருக்கும். செயற்கை கலரிங் போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்த கூட வாய்ப்புள்ளது. ஆனால் இயற்கை முறைகள் அப்படி இல்லை சற்று தாமதமானாலும் நிரந்தர பலனுடன் பக்கவிளைவுகள் இல்லாத பரிசை கொடுக்கும். பீர்க்கங்காய் எண்ணெய் இது இளநரைகளின் வேர்ப் பகுதியின் நிறத்தை மாற்றி இளநரையை போக்குகிறது. தேவையான பொருட்கள் உலர்ந்த பீர்க்கங்காய் - 1/2 கப் தேங்காய் எண்ணெய் - 1 கப் செய்முறை பீர்க்கங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி 4-5 நாட்கள் நிழலிலே காய வைக்க வேண்டும். இந்த உலர்த்த பீர்க்கங்காயை 3-4 நாட்கள் தேங்காய் எண்ணெய்யில் ஊற வைக்கவும். இப்பொழுது தேங்காய் எண்ணெய்யை பீர்க்கங்காயுடன் கொதிக்க விடவும். எ...